சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி ஒதுக்கி உள்ளது.  அத்துடன் ஓவைசி கட்சியும் இடம்பெற்றுள்ளது.

அதையடுத்து, இந்திய ஜனநாயக கட்சி  போட்டியிடும்  20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை முதல்கட்டமாக வெளியிட்டுள்ளது. அதன்படி,

  1. சேப்பாக்கம்,
  2. செங்கல்பட்டு,
  3. காட்பாடி,
  4. குடியாத்தம்,
  5. அரூர்,
  6. செங்கம்,
  7. கலசப்பாக்கம்,
  8. மயிலம்,
  9. விக்கிரவாண்டி,
  10. திருக்கோவிலூர்,
  11. சங்கராபுரம்,
  12. வீரபாண்டி,
  13. குளித்தலை,
  14. பெரம்பலூர்,
  15. அரியலூர்,
  16. விருத்தாசலம்,
  17. புவனகிரி,
  18. நன்னிலம்,
  19. திருவையாறு,
  20. பேராவூரணி

ஆகிய தொகுதிகளை முதல்கட்டமாக அறிவித்துள்ளது.