சென்னை
அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகக் கோடைக்கால ஆரம்பத்தையொட்டி வெயில் கடுமையாக தொடங்கி உள்ளது. இதுவரை குளிரை அனுபவித்த வந்த சென்னை மக்களுக்குக் கோடை வெயில் சற்றே சிரமத்தை அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பில் ”வடக்கு கேரளா முதல் வடக்கு மகாராஷ்டிரா வரையிலான வளிமண்டலத்தில் ஒன்றை கிமீ உயரத்துக்குக் காற்றின் சுழற்சி நிலவுகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
வரும் 13 மற்றும் 14 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை மற்றும் 15, 16, 17 தேதிகளில் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் முற்பகல் வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.