சென்னை: தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்  காலமானார். முன்னதாக, அவர்  மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில், அவர் உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் ஜனநாதன் யாரும் தொடாத பேசாத “பிட் காய்ன்” கதையை “லாபம்” படத்தில் பேசியிருப்பார். இந்த படம் வியாபார ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.  தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார்.  இவர் நேற்று வீட்டில் மயங்கிய நிலையில், இருந்தை கண்ட அவரின் உதவியாளர்கள், அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. , எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகவும்   அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி.ஜனநாதன் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.