சென்னை: அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர் தொகுதியும், என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது.

அதிமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கமும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர். தனபாலனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதே போல ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும்  பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக கூட்டணியில்  ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகத்துக்கு  சென்னை எழும்பூர் (தனி)  தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல் சென்னையில் பெரம்பூர் தொகுதி பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  இரட்டை இலை சின்னத்தில் அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.