கொச்சி:
கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடவுள்ளார்.

கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தொகுதிபங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் சுயேட்சைகள் உள்பட 83 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயனும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மட்டனூர் தொகுதியில் போட்டியிடவுள்ளனர்.