போபால்: உ.பி. உத்தரகாண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்தில், மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதும், 10ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத் எனப்படும் காதல் திருமணம் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தை பாஜக ஆட்சி செய்யும், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]