சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிக 50தொகுதிகளுக்கு அமமுகவிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே ரகசிய பேரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிக தொகுதிகளை கேட்டதால், அதிமுக கூட்டணியில் இருந்து விரட்டப்பட்ட தேமுதிக அமமுகவிடம் தஞ்சம் அடைந்துள்ளதாககூறப்படுகிறது. முன்னதாக, அமமுக, திமுக உள்பட பல கட்சிகளுடன் தொகுதி பேரம் நடத்திய தேமுதிகவை திமுக ஏற்றுக்கொள்ள மறுத்து கதவை சாத்தியதும், சசிகலா உள்பட சிலருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேவேளையில் அதிமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தியது. முன்னதாக 41 இடங்கள் ஒதுக்கவில்லை என்றால் 3வது அணி அமைப்போம் என பிரேமலதா மிரட்டியும் வந்தார். ஆனால், அதிமுக அதிகபட்சமாக 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்றதால், பேரம் படியாத நிலையில்,தேமுதிக நேற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றுறும், அதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் கூறியது.
முன்னதாக, கூட்டணி தொடர்பாக சசிகலாவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, பின்னர் டிடிவி தினகரனிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், மீண்டும் அமமுகவிடம் சரணடைந்துள்ளது. இரு தரப்பும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு பதில் தெரிவிக்காத நிலையில், அமமுகவுடன் 50 தொகுதிகளுக்கு பேரம் பேசி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் ஆட்சியை தீர்மாணிக்கப்போவது நாங்கள்தான் என கொக்கரித்து வந்த பிரேமலதா, இன்று சில இடங்களுக்காகவும் சில கோடி பணத்துக்காகவும் அல்லாடி வருவது அரசியல் கட்சிகளிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.