சென்னை

மிழகத்தில்  இன்றைய (09/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,56,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,525 பேர் உயிர் இழந்து 8,39,648 பேர் குணம் அடைந்து தற்போது 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,37,444 பேர் பாதிக்கப்பட்டு 4,169 பேர் உயிர் இழந்து 2,31,399 பேர் குணம் அடைந்து தற்போது 1,876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,182 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,145 பேர் குணம் அடைந்து தற்போது 352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,270 பேர் பாதிக்கப்பட்டு 786 பேர் உயிர் இழந்து 52,132 பேர் குணம் அடைந்து தற்போது 352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.