மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், அடுத்து தனுஷ் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

‘தனுஷ்- 43’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள, இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஒரு மாதம் நடந்தது.

“ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் நான் நடித்த முதல் படம் இது. மாஸ்க் மாட்டிகொண்டு செட்டில் இருந்தேன். முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பிறகு பழகிப்போனது. முதல் படத்தில் நடித்த மாதிரி இருந்தது” என்று சொல்லும் மாளவிகா, தனுஷை ரொம்பவே புகழ்கிறார்.

“தனுஷுடன் நடித்தது, வியப்பூட்டும் அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படப்பிடிப்புக்கு வந்தோம், டயலாக் பேசினோம் என அவர் இருப்பதில்லை. எல்லோரையும் ஊக்குவிப்பார்.

முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது. ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதால், அவர் திரும்பி வந்த பிறகுதான் அடுத்த கட்ட படப்பிடிப்பு இருக்கும்” என்கிறார், மாளவிகா.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், மாளவிகா.

– பா. பாரதி

[youtube-feed feed=1]