சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக மற்றும் தகவலறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பினார்.

1. வெடிகுண்டு தயாரிக்கப்படும் இடங்களின் பட்டியல் இருக்கிறதா ?
2. இது குறித்து உள்துறை அமைச்சகம் அமித் ஷா-விடம் விவரித்ததா ?
3. அமித் ஷா கூறியது அரசிடம் உள்ள தகவலின் அடிப்படையிலா ?
4. சந்தேகத்திற்கிடமான இந்த வெடிகுண்டு தொழிற்சாலைகள் குறித்து மே. வங்க மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா ?

என்று நான்கு கேள்விகளை கேட்டிருந்தார், அக்டோபர் முதல் இந்த கேள்விகளுக்கு விடை கொடுக்காமல் சால்ஜாப்பு காட்டி வந்த அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுப்பதற்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது அதற்கு பதிலளித்துள்ளது.

இந்த கேள்விகள் அனைத்திற்கும் ‘இல்லை’ என்று எதிர்மறையாக பதிலளித்திருக்கும் அதே வேளையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநிலத்தின் கடமை என்றும் இதுகுறித்து மாநில போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மே. வங்க மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெடிகுண்டு தயாரிப்பு பணிகள் நடக்கிறது என்று வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித் ஷா கொடுத்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நிரூபணமாகியுள்ளது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநிலத்தின் கடமையென்றால், அதை வைத்து அரசியல் செய்வது தான் மத்திய உள்துறை அமைச்சரின் வேலையா ? என்றும்

உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் மாநில அரசின் பொறுப்பு என்றால், பதன்கோட் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு எதுவும் தெரியாமல் போனது எப்படி ?என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.