சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வருகை தருகிறார். இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் ஜனாதிபதி, இன்று இரவு சென்னை வருகிறார்.

தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள குடியரசு தலைவர் இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார்.
அதன்பின்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
நாளைமறுநாள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 11 ஆம் தேதி மாலை வரை தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel