லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையமானது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று ஞாயிறு காலை 09.57 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியினை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 4.40 மணியளவில் எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.