சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விருப்பமனு அளித்துள்ளார்.

குமரி பாராளுமன்ற தொகுதி எம்.பியாக இருந்த எச்.வசந்தகுமார் கொரோனா தொற்று குணமடைந்த நிலையில், இணை நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்ததால்,அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பமனு பெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், குமரி பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பமனு வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel