சென்னை: திமுக கூட்டணியில் 100ஆண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், 10க்கும் 15க்கும் காத்திருந்தால் கடைசியில் மனதில்தான் இடம் கிடைக்கும் என பழ.கருப்பையா தமிழக காங்கிரஸ் கட்சியை நக்கலடித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 41 தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அந்த கட்சிக்கு வாங்கு வங்கி இல்லை என கூறி, அதிகபட்சமாக 20 தொகுதிகளைத்தான் தர முடியும் என திமுக தலைமை கூறி வருகிறது. இன்று மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்ததை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பழ.கருப்பையா, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவின் பி-டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், திமுக தான், பாஜகவின் பி-டீம் என்றவர், மே மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றால், ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியது தானே என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியவர், , ஆளும் பாஜக அரசு அனைத்து இடங்களுக்கும் பணம் அனுப்பி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து விமர்சித்த பழ.கருப்பையா, ஒருகாலத்தில் திமுகவிற்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 10 இடத்திற்கும் 15 இடத்திற்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது இப்படியே நீடித்தால், கடைசியில் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என்று நக்கலாக கூறினார்.