மேட்டுப்பாளையம்:
ராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்யபட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிப். 8ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழகம் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 26 யானைகள் பங்கேற்றன.பிப். 21ல் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான ‘ஜெயமால்யதா’ என்ற பெண் யானையை பாகன் வினில்குமார் உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர்.
பாகன் மற்றும் உதவியாளர் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். யானையை பராமரிக்க திருச்செந்தூர் கோவில் யானை பாகன் சுப்ரமணி தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.நீண்டகாலமாக யானையை பராமரித்து வந்த பாகன்கள் இல்லாததால் யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்பு உள்ளது.

எனவே மருத்துவக்குழு மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பரிந்துரையை ஏற்று ஜெயமால்யதா யானையை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முகாம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.