பெங்களூரு: அடுத்த 2023ம் ஆண்டிற்கான கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பாதயாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குரலுக்கான பாத யாத்திரை என்ற பெயரில், குறைந்தபட்சம், மாநிலம் முழுவதும் 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த யாத்திரை, நாளை(மார்ச் 3) முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த சட்டசபை தொகுதிகளில் இந்த யாத்திரை நடத்தப்படும் என்று தெரிவித்தார் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்.

அடுத்த 10 மாதங்களில், காங்கிரஸ் தலைவர்கள் இந்த தொகுதிகளுக்கு பயணம் செய்து, அப்பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்தி, 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.