மும்பை:

ந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

அதில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை அகமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.

இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.