மும்பை: ரிப்பள் டிவிக்க உதவியாக டிஆர்பி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சிக்கிய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council -BARC) முன்னாள் தலைமை செயல் அலுவலர் (சிஇஒ) பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது உள்ளது.
அர்னாப் கோஷ்வாமியின் ரி பப்ளிக் தொலைக்காட்சி நிறுவனம் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்கு, அப்போது மத்திய அரசின், பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council -BARC) தலைமை செயல் அலுவலர் (சிஇஒ) பதவியில் இருந்த பார்த தாஸ் குப்தா ஒத்துழைத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த மும்பை காவல்துறையினர், 2020ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பார்த்தோ தாஸ்குப்தாவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரது ஜாமின் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த புகாரில், 2017ம் ஆண்டு ஜூலை நடைபெற்ற இருவருக்கும் இடையேயான உரையாடலின் போது, ‘தாஸ்குப்தா’ பிரத்தியோக தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி (டிஆர்பி) தரவுகளை கோஸ்வாமிக்கு அனுப்பியதாகவும், தனது ரிபப்ளிக் டிவியினி டிஆர்பி புள்ளிகளை அதிகப்படுத்த தாஸ்குப்தாவுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்தாகவும் கூறப்பட்டது. அதற்கு லஞ்சமாக, பார்த்தோ தாஸ்குப்தா அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து, இரண்டு தனித்தனி விடுமுறை பேக்கேஜ் உள்பட மொத்தம் ரூ .40 லட்சம் வரை தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பார்த்தோ தாஸ்குப்தாவக்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச்2) அவருக்கு பிணை வழங்கியுள்ளது. ரூ.2 லட்சம் சொந்த பத்திரம் செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.