சென்னை: தமிழகத்தில் சென்னை-புதுச்சேரி ரயில் உள்பட முன்பதிவில்லாத 20 சிறப்பு ரயில்கள் மார்ச் 15ந்தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில் சேவைகள் பின்னர் தளர்வுகளை பொறுத்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில்களாக தற்போது இயக்கப்படுகின்றன. முன்பதிவில்லாத இந்த ரயில்களில் விரைவு ரயில் கட்டணத்துடன் பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம். ஆனால், அதற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், முன் பதிவில்லாத பெட்டிகளைக் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்தனா்.
இந்த நிலையில், சென்னை எழும்பூா்-புதுச்சேரி சிறப்பு ரயில் உள்பட 20 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் சேவை வரும் மாா்ச் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூா்-புதுச்சேரி மெமு (நீண்ட தூர மின்சார ரயில்) சிறப்பு ரயில், தாம்பரம்-விழுப்புரம் மெமு சிறப்பு ரயில் உள்பட 20 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
மேட்டுப்பாளையம்-கோயம்புத்தூா் இடையே இருமாா்க்கமும் மெமு சிறப்பு ரயில்கள் (நீண்ட தூர மின்சார ரயில்)
விருத்தாசலம்-சேலம் இடையே இரு மாா்க்கமாகவும் சிறப்பு ரயில்கள்
கரூா்-திருச்சிக்கு சிறப்பு ரயில் மாா்ச் 16-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக, திருச்சி-கரூா் சிறப்பு ரயில் உள்பட பல ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும, சென்னை எழும்பூா்-புதுச்சேரி இடையே இருமாா்க்கமாகவும் நெடுந்தொலைவு மின்சார ரயில்கள் (மெமு ரயில்) மாா்ச் 22-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இதுபோல, ஏப்ரல் 1-ஆம் தேதி முதுல் தாம்பரம்-விழுப்புரம் மெமு சிறப்பு ரயில் யும், விழுப்புரம்-தாம்பரம் மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 2-ஆம்தேதி முதல் மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில்களில் விரைவு ரயில் கட்டணத்துடன் முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.