சென்னை:
‘சிங்காரச் சென்னை’ என்று வெறும் வார்த்தை அளவில் மட்டுமே உள்ள சென்னையை அழகுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சென்னை மாநகரில் தற்போது மேம்பாலங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளின் நடுவில் பாலங்கள் அமைந்திருப்பது, போக்குவரத்துக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால், மேபாலங்களின் அடிப்பகுதியும், தூண்களும் போதுமான பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. கண்ட கண்ட போஸ்டர்களையும் ஒட்டி தூண்களையும், பாலத்தின் சுவர்களையும் அசிங்கமாக்கி விடுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையிலும், சென்னை மாநகரை அழகுப்படுத்தும் விதமாகவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சென்னை பெரு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலங்களின் சுவர்கள், அடிப்பகுதி, தூண்களை வண்ண மயமாக கலை நயமிக்க ஓவியங்களை வரைந்தால் காண்பதற்கு அழகாக இருக்கும்.
பெங்களூருவில் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரு அழகிய நகரமாக காட்சி அளிக்க தொடங்கியுள்ளது. இதை முன் உதாரணமாக கொண்டு சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதேபோல் மெட்ரோ ரயில் பாலங்களையும் அழகுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முன் வரவேண்டும்.
ஏற்கனவே அரசு சுவர்களில் ஓவியங்கள் வரையும் நடைமுறையை மாநகராட்சி அமல்படுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சுவற்றில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், போஸ்டர்கள் ஒட்டுவதையும் இது தடுக்கும் வகையில் இருக்கிறது. இதேபோன்ற நடைமுறையை மேம்பாலத்தின் தூண்கள், மற்றும் அடிப்பகுதிகளிலும் செயல்படுத்தலாமே….
https://www.facebook.com/theugl.yindian/