சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக சபாநாயகர் தனபால் புகழ்ந்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் தனபால், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசியதாவது: அனைத்து நாட்களும் சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமி தான். அதன்பின் முக்கிய பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பேரவையில் துணை நின்ற ஸ்டாலின், முக்கிய பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார் என்று ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.