விதர்பா

காராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் கொரொனா தொற்றில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று வரை சுமார் 21.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 52 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 20.12 லட்சம் பேர் குணம் அடைந்து 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்குக் கல்வி பயிலும் மாணவர்களில் பலர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்: ஆவார்கள்.   இந்த 327 மாணவர்கள் பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.   இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

இந்த சோதனையில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை அப்பகுதி வட்டாட்சியர் அஜித் ஷெவார் உறுதிப் படுத்தி உள்ளார்.   அந்த பள்ளி ஊழியர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இப்போது அந்த விடுதி உள்ள  பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.