அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 30 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
துவக்க வீரர்களில் ஒருவரான டாம் சிப்ளி, இஷாந்த் ஷர்மா பந்தில் டக்அவுட் ஆனார். ஆனால், மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராலி 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களுடன் ஆடி வருகிறார்.
மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய முக்கிய வீரர் பேர்ஸ்டோ, அக்ஸார் படேல் சுழலில் டக் அவுட் ஆனார். தற்போது, கிராலியுடன், கேப்டன் ஜோ ரூட் இணைந்துள்ளார். இங்கிலாந்து அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.