டில்லி
உலக அளவில் கொரோனா தடுப்பூசி அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் எத்தனை சதவிகிதம் போடப்பட்டது என்பது குறித்த தகவல் இதோ
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் போடும் பணி பல நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து நாடுகளிலும் முதல் கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றது. குறிப்பாக கொரோனா எதிர்ப்பு பணியில் உள்ள முன் களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அவ்வகையில் இஸ்ரேல் நாட்டில் அதிக சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு அந்நாடு முதல் இடத்தில் உள்ளது. இங்கு மொத்த மக்கள் தொகையில் 80% பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இரண்டாம் இடத்தில் பிரிட்டன் 19% பேருடனும் மூன்றாம் இடத்தில் அமெரிக்கா 19% மற்றும் அடுத்த இடங்களில் ஐரோப்பிய நாடுகளில் 5 முதல் 10|% வரையிலும் சீனாவில் 3% பேருடனும் உள்ளன.
கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆயினும் இந்தியாவில் இதுவரை மொத்த மக்கள் தொகையில் 0.8% பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.