அறிவோம் தாவரங்களை – எலுமிச்சை
எலுமிச்சை (Lemon)
மஞ்சள் நிறத்தழகி!
மாரியம்மன் கழுத்தழகி!
காளிதேவி சூலத்தின் கண்ணழகி!
பாரதத்தின் ராசாக்கனி!
பெரியவர்கள் கையில் அன்பின் அடையாளம்!
பித்தாளன் தலையில் பிணி நீக்கும் மருந்தாளன்!
உப்பைத் திருமணம் செய்து ஊறுகாய்க்குழந்தை பெற்ற கர்ப்பிணிப் பெண் நீ!
வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு!
பழைய சோற்றுக்குத் தொட்டுக்காய்!
வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் தாவரம் நீ !
அசாம் நாட்டின் அன்பு மருமகள்!
தோல் நோயைப் போக்கும் தொற்று நீக்கி!
அவசர விருந்தினருக்கு ஆபத்தில் உதவும் அமுதபானம்!
தேசிக்காய்,தோடாப்பழத்தின் இளைய சகோதரி!
நகச்சுற்றி வலி போக்கும் குடைமருந்து!
விளையாட்டு வீரர்களின் ஊக்கத் திரவம்!
மருந்தாய்ப் பயன்படும் தேவ கனியே!
மலர்போல் மணக்கும் நிலாப் பழமே!
சான்றோர் மனம் போல் வாழ்க!வளர்க!
நன்றி : தியாகராஜன்(VST).