சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை மேலும் 31 பைசா உயர்ந்து ரூ. 92.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.62-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மத்திய மாநிலஅரசுகள் வரிகளை உயர்த்தி வருகின்றன. மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் வசூலித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டீசல் லிட்டருக்கு ரூ.12 அதிகரித்துள்ளது. இதனால், லாரிகளும் வாடகை கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, உணவுப்பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லாரிகள் வாடகை உயர்வு காரணமாக, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணை நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் கனரக வாகனங்களின் வாடகை உயர்வு காரணமாக மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த காணப்படுகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.59 ரூபாய், டீசல் லிட்டர் 85.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால்,
இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.62 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோட்டில் இன்று பெட்ரோல் விலை ரூ.93.54 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை, கோவையில் ரூ.93.45 ஆகவும், சேலத்தில் ரூ.93.38 ஆகவும், திருச்சி, திருநெல்வலியில் ரூ.93.03 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
துச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.55 ரூபாய்க்கும் டீசல் 86.08 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 62 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.58 ரூபாயிலிருந்து. 90.93 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 80.97 லிருந்து 81.32 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு. 97.34 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 88.44 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.