ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் இயக்குநர் கண்ணன்.
நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷே நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.