ஜனநாயகத்தை வெறுக்கும் மோடியின் பாஜக, புதுச்சேரியில் தனது சித்து விளையாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டது. மக்களுக்கு தொடர்பில்லாத நியமன உறுப்பினர்களை வைத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அரசை பாஜக கவிழ்த்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும், இதில் ஒன்றை கவனிக்க வேண்டும் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்!

புதுச்சேரி சட்டசபைக்கான 3 நியமன உறுப்பினர்களை, ஆளும் அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டுமென்பது விதி. ஆனால், முதல்வராக இருந்த நாராயணசாமியிடம் அந்த வாய்ப்பு இருந்தும், அவர் காரணமின்றி காலம் தாழ்த்திக்கொண்டே வந்தார். அவர் தன் கட்சிக்காரர்களையே நம்பவில்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன.

இறுதியில், நாராயணசாமியின் தாமதத்தை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய கிரண்பேடி, 3 பாஜக ஆதரவாளர்களை நியமன உறுப்பினர்களாக்கிவிட்டார்!

தனக்கு வந்த வாய்ப்பை நழுவவிட்ட நாராயணசாமி, கிரண்பேடி அதை செய்தவுடன் எதிர்ப்பு தெரிவித்தது எந்த பலனையும் அளிக்கவில்லை. இன்று, அந்த நியமன உறுப்பினர்களாலேயே அவரின் அரசு காவு வாங்கப்பட்டுள்ளது.

ஆக, தான் செய்த தவறுக்கு, தானே பலியாகிவிட்டார் நாராயணசாமி! என்கின்றனர் அந்த விமர்சகர்கள்…