
2021 பிப்ரவரி 22 திங்கள் முதல், 24 புதன்கிழமை வரை தெய்வீக சுவையூட்டும் பஜனை பாடல்களை கேட்டு பயனுற கலர்ஸ் தமிழ் சேனல் முயற்சித்து இருக்கிறது .
பஜன் சாம்ராட் எனும் ரியால்டி நிகழ்ச்சியின் வழியாக தெய்வீக சுவையை வார நாட்களில் வழங்குகிறது கலர்ஸ் தமிழ்.
புகழ்பெற்ற கர்நாடக சங்கீத விற்பன்னர்களான டாக்டர் ஆர்.கணேஷ் மற்றும் மஹதி இந்த நிகழ்வில் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகின்றனர்.
ஒரு பிரத்யேக சுற்றில் பிரபல கவிஞரான கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்ட தமிழ் பஜனை பாடல்களை பாடி கொண்டாடுவது இந்த வார நிகழ்வுகளில் சிறப்பம்சமாக இருக்கும்.
Patrikai.com official YouTube Channel