புதுச்சேரி: புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு இன்று காலை அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதையடுத்து, தமது முதலமைச்சர் பதவியை நாராயணசாமி  ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.