புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி  காங்கிரஸ்கட்சியில் 4 எம்எல்ஏக்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அங்கு அரசு மெஜொரிட்டி இழந்தது. இதையடுத்து, ஆளுநரின் உத்தரவின் பேரில் , பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இன்று சட்டபேரவை கூடியது.  முதல்வர் நாராயணசாமி இன்று  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில்,  புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக பேரவையில் சபாநாயகர்  சிவக்கொழுந்து அறிவித்தார்.  இதனால், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைநதுள்ளது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.