புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வர் நாராயணசாமி இன்று  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார்.

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி  காங்கிரஸ்கட்சியில் 4 எம்எல்ஏக்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அங்கு அரசு மெஜொரிட்டி இழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதைத் தொடர்ந்து ஆளுநகர்,  சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி, முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாநில சட்டப்பேரவை இன்று காலை 9 மணிக்கு கூடியது.  சபை கூடியதும்,  முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவைக்கு வந்தார். அதைத் தொடர்ந்து  காங்கிரஸ் – திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 12 பேர் வருகை தந்தனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்பட என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 11 பேர் வருகை தந்தனர். பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் சபைக்கு வந்தனர். 

சபை வழக்கன நடைமுறைப்படி தொடங்கியது, முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது,  எனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம் . கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள், திட்டங்களை நிறைவேற்றினோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.