நியூசிலாந்து: 

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது.

முதலில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, நாடு கொரோனா தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இன்று எங்கள் வரலாற்றில் மிகப்பெரிய நோய் தடுப்பு திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம் எனவும், இது நியூசிலாந்தில் உள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான படியாகும் எனவும், ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் சுமார் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் தடுப்பூசி திட்டம் திங்களன்று வெலிங்டனிலும் பின்னர் கிறிஸ்ட்சர்ச்சில் புதன்கிழமையும் தொடங்கப்படும் என்று ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மக்கள் விழிப்புடன் இருக்கவும், மக்கள் அடிப்படை சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.