விஜயவாடா: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் உள்ள மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
விமானத்தில் பயணித்த 64 பயணிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய இயக்குநர் ஜி. மதுசுதன் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Patrikai.com official YouTube Channel