சென்னை: ரூ.18 லட்சம் மதிப்புள்ள ரயில்வே இ-டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக  2 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1500 இ-டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இணைய உலகின்  ஏகோபித்த வளர்ச்சியால் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால்,  சமீப காலங்களில் இணையதள முறைகேடுகளும் அதிகரித்து வருகிறது. ரெயில்வே டிக்கெட், பணப்பரிவர்த்தனை போன்றவைகளும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக்கி முறைகேடு செய்து வருகின்றனர். அதன்படி, ரயில் இ-டிக்கெட்டுக்களை  முன்கூட்டியே பதிவு செய்து, கள்ளச்சந்தையும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்னர். இது தொடர்பான புகாரின் பேரில், அவர்களை கைது செய்ய ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் இ-டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில்  அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்னர் அவர்களிடம் இருந்து, ரூ.18 லட்சம் மதிப்பிலான 1500 இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள்,  திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ டிராவல்ஸ் என்ற தனியார் ஏஜென்சி நிறுவனம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், அங்கு நடத்தப்பட்ட  அதிரடி சோதனையில் 15-க்கும் மேற்பட்ட நபர்களுடைய முகவரியை வைத்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள சுமார் 1500 இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினர்.

இதுதொடர்பாக  அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வினோதன் மற்றும் ஊழியர் ஹரிஹரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவரிடமிருந்து 1500 இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கணினி, இரண்டு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேர் மீதும் 143(1)(a) (தனிபர் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மோசடி) கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.