டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள சூழியல் ஆர்வலர் திஷா ரவிக்கு, சுவீடனைச்சேர்ந்த  சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 80 நாட்களை கடந்து தொடர்டந்து வருகிறது.  கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள்  டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு செங்கோட்டை கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறை, பஞ்சாபி நடிகர் சித்து உள்பட பலரை கைது செய்துள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டம் உலக நாடுகளின் கவனத்துக்கு சென்றுள்ளது. கிரேட்டா தன்பெர்க் உள்பட பல சூழியல் ஆய்வாளர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வாசகங்களைக்கண்ட டூல்கிட் லிங்க் ஒன்றை  டிவிட்டரில்முதலில் பதிவிட்டிருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து, பின்னர் அதை நீக்கி விட்டார்.

இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மற்றும் மேலும் பலர், கிரேட்டா தன்பெர்க்சின் டூல்கிட்டை, சேர் செய்து பதிவிட்டிருந்தனர்.  இதையடுத்து,  திஷா ரவி மீது தேசத்துரோகம் மற்றும் சதிச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, டெல்லி காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இதுகுறித்து, கிரேட்டா தன்பெர்க் மீண்டும் டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,  “பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு மற்றும் ஜனநாயக  உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.”StandWithDishaRavi” என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி உள்ளார்.