புதுச்சேரி: பொறுப்பு ஆளுநர் தமிழிசை, நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் என கூறி வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் என முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநராக இருந்து வந்த கிரண்பேடி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற நாளிலேயே, முதல்வரை அழைத்து, வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழிசை உத்தரவு பிறப்பித்தார்.  இது புதுச்சேரி அரசியல் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் புதுவை ஆளுனராக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்து விட்டார் என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.   பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை  பாஜக என்று குறிப்பிட்டுள்ளார். நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது.

இதுபற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சி மாறும் தடை சட்டத்திலுள்ள பிரிவொன்றில், நியமன எம்எல்ஏக்களாகி ஆறு மாதத்துக்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. சேராவிட்டால் அவர் நியமன எம்எல்ஏதான்.  இதுபற்றி சபாநாயகரிடம் பேசுவேன் வரும் 21ம் தேதி காங்கிரஸ்-திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அதில் சட்டப்பேரவையில் கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.