டெல்லி: இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாங்கோங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, மற்ற பகுதிகளிலிலிருந்தும் வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தையின் போது பேசப்பட உள்ளது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இருந்து முன்கள வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். கிழக்கு லடாக்கில் கடந்த 10ம் தேதி முதல் இரு தரப்புகளும் முன் அணி படைகளை விலக்கி கொள்ளும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்திருந்தது.
முன்னதாக, இருநாடுகளின் ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 9ம் சுற்று பேச்சு வார்த்தையில் இரு தரப்புகளும் எட்டிய ஒருமித்த கருத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.