மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
அரையிறுதிப் போட்டியில், இவர் உலகின் 3ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப்டட இப்போட்டியில், 3-6, 4-6 என்ற கணக்கில், ஒசாகாவிடம் எளிதாக வீழ்ந்தார் செரினா வில்லியம்ஸ். இதனால், இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார் அவர்.
இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாம் முறையாக இறுதிக்கு முன்னேறுகிறார் ஜப்பானின் ஒசாகா. கடந்த 2019ம் ஆண்டு, இத்தொடரில் மகளிர் ஒற்றையர் கோப்பையை இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் மோதுகிறார் ஜப்பானின் ஒசாகா.