மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிக்.
தற்போதைய நிலையில், டென்னிஸ் உலகின் நம்பர்-1 வீரரான இவர், கடந்தமுறையும், ஆஸ்திரேலிய ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 33 வயதாகும் ஜோகோவிக், ரஷ்யாவின் அஸ்லான் கரட்சேவை 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இவர் வென்றால், இப்பட்டத்தை 9வது முறையாக இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தகுதிபெறும் 28வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“முழு போட்டித் தொடரிலும், நான் சிறந்ததாக உணர்வது இதுவேயாகும்” என்று இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஜோகோவிக்.