டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 406 பேர், மற்றும் டில்லியில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,46,860 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 6 பேர் மரணம் அடைந்து இதுவரை 12,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 306 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,28,767 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 5,792 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,37,445 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை 10,896 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 153 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,25,496 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,053 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.