சென்னை
தமிழகத்தில் இன்றைய (18/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 457 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,444 பேர் உயிர் இழந்து 8,30,320 பேர் குணம் அடைந்து தற்போது 4,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,33,936 பேர் பாதிக்கப்பட்டு 4,131 பேர் உயிர் இழந்து 2,28,176 பேர் குணம் அடைந்து தற்போது 1,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,319 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,237 பேர் குணம் அடைந்து தற்போது 403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,310 பேர் பாதிக்கப்பட்டு 776 பேர் உயிர் இழந்து 51,168 பேர் குணம் அடைந்து தற்போது 366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.