இரும்பு திரைகளால் சூழப்பட்டுள்ள தேசம்- வட கொரியா. அங்கு என்ன நடந்தாலும் வெளியே தெரிவது இல்லை.
அரசாங்கம், தனது ஊடகங்கள் மூலம் சொல்வது தான், செய்தி.
“எங்கள் நாட்டில் கொரோனாவே கிடையாது” என வட கொரியா சொல்கிறது. அதனை நாமும் நம்ப வேண்டியுள்ளது.
வெளியில் நடக்கும் விஷயங்களே தெரியாத போது, அதிபர் கிம் ஜோங் உன் – இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் எப்படி தெரிய வரும்?
அதிபர் கிம் ஜோங் உன் மனைவி பெயர்- ரீ சோல் ஜு.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ரீ சோல், கணவருடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவியது.
வெளிநாடுகளிலும் “வட கொரிய அதிபர் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்” என செய்திகள் பரவின.
இதற்கு, இந்த தம்பதியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அந்த நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் நடந்த நிகழ்ச்சியில் கனவருடன், ரீ சோல் பங்கேற்றார்.
இருவரும் கலை நிகழ்ச்சியை சிரித்தவாறு காணும் போட்டோக்கள் வெளியிடப்பட்டன.
“நான் கர்ப்பமாக இல்லை” என இந்த போட்டோக்கள் மூலம் உலகுக்கு உணர்த்தி உள்ளார், இரும்பு கோட்டையின் ராணி.
– பா. பாரதி