டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 4,892. மற்றும் மகாராஷ்டிராவில் 4,787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 20,76,093 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,631 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3853 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,85,261 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 38,013 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,16,849 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,832 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,51,742 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.