டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுடன், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கின.
இந் நிலையில் ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. டோக்கியோ மருத்துவ மைய இயக்குனர் கசுஹிரோ அராக்கி முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் சுகா ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.