
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.ஆனால், அண்டை நாடுகளான இலங்கை உள்பட பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை, இந்தியாவை ஒப்பிடும்போது மிக்குறைவாகவே உள்ளது. இந்தியாவில் அதிகப்படியாக விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் விதிக்கிறது.
இந்த நிலையில்,கடந்த 9-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்நது வருகிறது. இன்று பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 25 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை100 ரூபாயைக் கடந்து, ரூ.100.13க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய வரலாற்றிலேயே முதன்முறை என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் கடந்த மாதம், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் லிட்டருக்கு 25 பைசா உயர்வால் டெல்லியில் லிட்டர் ரூ.89.54 ஆகவும், டீசல் ரூ.79.95 ஆகவும் விற்கப்படுகிறது.
மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96க்கும், டீசல் லிட்டர் ரூ.86.98க்கும் விற்பனையாகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.90க்கும், டீசல் லிட்டர் ரூ.90.35க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல, டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.85.01-க்கு விற்பனை
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 90.78 பைசாவாகவும், டீசல் விலை லிட்டர் 85.01 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.