புதுச்சேரி: புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்எக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலும் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்,அங்கு அதிரடியாக அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசின் 2 அமைச்சர்கள் உள்பட 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில்,நேற்று திடீரென ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டு, பொறுப்பு ஆளுநகரா தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர்.
மாற்றப்பட்ட ஆளுநர் கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு நிகழ்த்தினர். அப்போது சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, ” முதல்வர் நாராயணசாமி பதவி விலக வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நாராயணசாமி தலைமை யிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட மனுவை துணை நிலை ஆளுநரின் செயலாளரிடம் அளித்துள்ளோம்” என்றார்.