தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவரிடம் “கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை உங்கள் கூட்டணியில் சேர்க்க நீங்கள் ஆர்வத்துடன் உள்ளதாக கூறப்படுகிறதே?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அழகிரி “ஒரு பேட்டியின் போது கமலஹாசன் வந்தால் உங்கள் கூட்டணியில் சேர்ப்பீர்களா? என கேள்வி எழுப்பினர்.

மரியாதை காரணமாக ‘கமல் வந்தால் சேர்ப்போம்’ என்று கூறினேன். சேர்க்க மாட்டேன் என்றா கூற முடியும்?

மற்றபடி கமலஹாசனை. எங்கள் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க.தான் முடிவு செய்யும்” என்று பதில் அளித்தார்.

“சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை இன்னும் தொடங்கவில்லை” என குறிப்பிட்ட கே.எஸ். அழகிரி “கடந்த மக்களவை தேர்தலில் தி.மு,.க.வுடன் நான்கு மணி நேரத்தில் தொகுதி பங்கீட்டை கட்சி தலைவர்கள் முடிவு செய்தோம். ஆனால் இந்த முறை கூடுதலாக நான்கு மணி நேரம் தேவைப்படும்” என கே.எஸ்.அழகிரி மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி