லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் சேப்பாக்கம் பிட்ச், அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும், அது டெஸ்ட் போட்டிக்கு லாயக்கற்றது என்றும் கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

இரண்டாம் நாளான இன்று மட்டும், மொத்தமாக 15 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. அதில், 10 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மைக்கேல் வான் கூறியுள்ளதாவது, “இரண்டாம் டெஸ்ட் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமானால் இது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியா சிறப்பாக செயல்படுவது குறித்து எந்த சால்ஜாப்பும் சொல்வதற்கில்லை. ஆனால், இது 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற பிட்ச் அல்ல. சொந்த நாட்டில் நமக்கு விருப்பமான பிட்சை வாங்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இது 5 நாட்களுக்கான பிட்ச் அல்ல. நான் இந்தியாவாக இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன்” என்றுள்ளார் அவர்.