சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை நகரெங்கும் பிரம்மாண்டமான பானர்கள் வைக்கப்ப்ட்டிருந்தன.
இதற்கு அரசியல் ஆர்வலர்கள் பலர் கடும் விமர்சனம் எழுப்பி இருந்தனர். முன்பு சென்னையில் ஒரு பெண் ஐடி ஊழியர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பானர் அறுந்து அவர் மேலே விழுந்து உயிர் இழந்தார்.
அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அனைத்துக் கட்சிகளையும் பேனர் வைப்பது தவறு எனவும் தமது கட்சி பேனர்கள் வைக்காது எனவும் கூறி இருந்தார் என்பதால் இந்த எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலயில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாட்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதிக்கு பதில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் என கமலஹாசன் அறிவித்துள்ளார். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி தாமதம் ஆவதால் வேறு வழியின் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளதாக் அவர் கூறி உள்ளார்.